விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழப்பு!

சென்னை: பிரபல வணிக வளாகத்தில் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்தின் தரைதளத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் அருண் குமார், அவரது சகோதரர் ரஞ்சித்குமார் உள்ளிட்ட 5 பேரை அழைத்துச் சென்றிருக்கிறார். ரஞ்சித்குமார் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது விஷவாயு தாக்கி மயக்கம் அடைந்திருக்கிறார். உடனே தம்பியைக் காப்பாற்றுவதற்காக அவரது அண்ணன் அருண்குமார் தொட்டியில்
 

சென்னை: பிரபல வணிக வளாகத்தில் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்தின்‌ தரைதளத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் அருண் குமார், அவரது சகோதரர் ரஞ்சித்குமார் உள்ளிட்ட 5 பேரை அழைத்துச் சென்றிருக்கிறார்.

ரஞ்சித்குமார் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது விஷவாயு தாக்கி மயக்கம் அடைந்திருக்கிறார். உடனே தம்பியைக் காப்பாற்றுவதற்காக அவரது அண்ணன் அருண்குமார் தொட்டியில் இறங்கி அவரை மேலே தூக்கி விட்டிருக்கிறார். அப்போது அருண்குமார் விஷவாயு தாக்கி உயிரிழந்தார். தனியார் வணிக வளாக பாதுகாப்பு அதிகாரிகள், அருண்குமார் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அருண்குமார் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் கழிவுகளை அகற்றும் ‌பணியின்போது இறந்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகமே அதிகபட்சமாகும். கழிவுகளை அகற்றும் பணிகளின்போது விஷவாயு தாக்குவது, மண் சரிவது உள்ளிட்ட காரணங்களால் மனிதர்கள் இறப்பது தொடர்கதையாகவே உள்ளது. கடந்த 1993ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்தியாவில் கழிவுகளை அகற்றும் பணியின்போது மட்டும் 620 பேர் உயிரிழந்துள்ளனர்.

https://www.A1TamilNews.com