ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? அதிர்ச்சியில் மக்கள்!!

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசும், மாநில அரசுகளும் எடுத்து வருகின்றன. ஆனால், கொரோனா தொற்றால் சர்வதேச அளவில் இதுவரை 50,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை 2300 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் 411 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என விஜய பாஸ்கர் தமது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார். தமிழகத்தில்
 

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசும், மாநில அரசுகளும் எடுத்து வருகின்றன. ஆனால், கொரோனா தொற்றால் சர்வதேச அளவில் இதுவரை 50,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை 2300 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் 411 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என விஜய பாஸ்கர் தமது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மக்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறைகளை சரிவர பின்பற்றாமல் இருப்பதும் ஒரு காரணமாக கூறப்பட்டுள்ளது.

இதனால் இந்த ஊரடங்கு உத்தரவு காலம் ஏப்ரல்14க்கு பிறகும் நீட்டிக்கப்படலாம் என்று கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. காணொளி கான்பரன்சிங் மூலம் மாநில முதல்வர்கள், பிரதமருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு உடனடியாக இயல்பு நிலைக்கு மாநிலங்கள் மாறி விடக்கூடாது என்றும் கூறப்பட்டிருக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது ஏப்ரல்14ம் தேதிக்கு பிறகும் தமிழக மக்கள் மீண்டும் ஊரடங்கைச் சந்திக்க நேரிடும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

A1TamilNews.com