விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைக்கப்படுமா!தமிழக அரசு விளக்கம்!

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் தீவிரமாக மத்திய மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 3லட்சம். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000 பேர். ஆகஸ்ட் 22ல் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வர இருப்பதை தொடர்ந்து பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பது, சிலைகளை கரைப்பது குறித்து தலைமைச்செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில்
 

ந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் தீவிரமாக மத்திய மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 3லட்சம். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000 பேர். ஆகஸ்ட் 22ல் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வர இருப்பதை தொடர்ந்து பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பது, சிலைகளை கரைப்பது குறித்து தலைமைச்செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கக் கூடாது என முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com