தமிழகத்தில் மழை நிலவரம்! இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்!

தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த வாரம் முழுவதும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. தமிழகத்தின் வட மற்றும் உள் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக இன்று கோயமுத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி, தஞ்சாவூர்,
 
தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த வாரம் முழுவதும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. தமிழகத்தின் வட மற்றும் உள் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.
 
இந்த நிலையில் தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக இன்று கோயமுத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
மேலும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் சிலஇடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.