வேலூர் வாகன ஓட்டுநர்களே உஷார்; 3 முறை சிக்கினால் உங்க லைசென்ஸ் ரத்து..!

 

நோ பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்தி 3 முறை சிக்கினால் டிரைவிங் லைசென்ஸ் தானாகவே ரத்து ஆகி விடும் என, போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூரில், புதிய பேருந்து நிலையம் கிரீன் சர்க்கிள், பழைய பேருந்து நிலையம், அண்ணா சாலை பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு, நோ பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்துவதே காரணம் என தெரியவந்தது.

இதையடுத்து, வேலூர் போக்குவரத்து போலீசார் இன்று முதல் புதிய நடைமுறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளனர். அதன்படி, நோ பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்தி 3 முறை சிக்கினால் டிரைவிங் லைசென்ஸ் தானாகவே ரத்து ஆகி விடும்.

இதுகுறித்து வேலூர் ஏஎஸ்பி ஆல்பர்ட் ஜான் கூறியதாவது, “வேலூரில், நோ பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்தி 3 முறை அபராதம் செலுத்தினால் 4 வது முறை தானாகவே அவர்கள் டிரைவிங் லைசென்ஸ் ரத்து ஆகி விடும்.

அபராதம் செலுத்தும் விவரம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும். இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது” என அவர் கூறினார். இந்த நடைமுறை குறித்து வாகன ஓட்டுநர்களுக்கு தெரிவித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.