தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு நினைவேந்தல்! அரசுக்கு கமல் ஹாசன் கண்டனம்!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று 100 நாட்களாக அமைதி வழியில் போராட்டம் நடத்தி வந்த மக்கள், 100வது நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் சென்று மனு கொடுக்க சென்றனர். அப்போது நடந்த கலவரத்தில் போலீசாரின் துப்பாக்கி சூட்டுக்கு 13 பேர் பலியானார்கள். பின்னர் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஆலை தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் குறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனின்
 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று 100 நாட்களாக அமைதி வழியில் போராட்டம் நடத்தி வந்த மக்கள், 100வது நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் சென்று மனு கொடுக்க சென்றனர்.

அப்போது  நடந்த கலவரத்தில் போலீசாரின் துப்பாக்கி சூட்டுக்கு 13 பேர் பலியானார்கள். பின்னர் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஆலை தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் குறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனின் விசாரணையும் நடந்து வருகிறது.

இன்று தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 2ம் ஆண்டு நினைவேந்தலை உலகம் முழுவதும் தமிழர்கள் அனுசரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக கமல் ஹாசன் ட்விட்டரில் தன்மானத்தை அடகு வைத்த அரசு என்று தமிழக அரசை கடுமையாகச் சாடியுள்ளார்

“மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல், போர் குற்றவாளிகளைப் போல் சொந்த அரசே எம் மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம் இன்று. சுவாசிக்க நல்ல காற்றைக் கேட்டவர்களின் மூச்சையே பறித்து, முதலாளியின் வருமானத்தை காக்க, அரசு தன் மானத்தை அடகு வைத்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிறது.” என்று கமல் ஹாசன் கூறியுள்ளார்

A1TamilNews.com