அரசு ஊழியர்களின் உற்ற நண்பனாக தமிழ்நாடு அரசு உள்ளது; முதல்வர் ஸ்டாலின்..!

 

சத்துணவு சமையல் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்படுகிறது என முதல்vர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அதன்படி, இன்று 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது,

“போராட்ட காலங்களில் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்படும். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் வேலைநிறுத்த காலம், பணிநீக்க காலம் வேலைநாட்களாக கருதப்படும்.

ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணியமர்த்தப்படும் முறை ஒழிக்கப்படும். பணியின் போது காலமான அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வதில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.

அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மகன், மகள்கள் சேர்க்கப்படும்.

சத்துணவு சமையல் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்படுகிறது. அரசு ஊழியர்களின் உற்ற நண்பனாக தமிழ்நாடு அரசு உள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருப்பதால், மாணவர் - ஆசிரியர்கள் விகிதாச்சாரம் இணையாக இருப்பதற்காக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்”  என கூறினார்.