ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் !! பல முறை தேர்வுகள் எழுதி , 4 முறை தோல்வி அடைந்து 5 வது முறையாக வெற்றி கண்ட விவசாயி மகள்

அபிநயா கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மை அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் ஒரு விவசாயியின் மகள். இவரது கனவு ஐ.ஏ.எஸ். ஆகவேண்டும் என்பதே. இதற்காக பல முறை சிவில் தேர்வுகள் எழுதி ஏற்கனவே நான்கு முறை தோல்வி அடைந்துள்ளார். தற்போது ஐந்தாவது முறையாக தேர்வு எழுதி இந்திய அளவில் 559 வது இடத்தைப் பிடித்துள்ளார். இது குறித்து அபிநயா கூறியபோது ,எனது அப்பா ஒரு விவசாயி எனது அம்மா வீடு வேலைகளை பார்த்துக்
 

பிநயா கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மை அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் ஒரு விவசாயியின் மகள்.

இவரது கனவு ஐ.ஏ.எஸ். ஆகவேண்டும் என்பதே. இதற்காக பல முறை சிவில் தேர்வுகள் எழுதி ஏற்கனவே நான்கு முறை தோல்வி அடைந்துள்ளார். தற்போது ஐந்தாவது முறையாக தேர்வு எழுதி இந்திய அளவில் 559 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இது குறித்து அபிநயா கூறியபோது ,எனது அப்பா ஒரு விவசாயி எனது அம்மா வீடு வேலைகளை பார்த்துக் கொள்கிறார். அண்ணன் விவசாயம் தான். தனியார் பள்ளியில் 11 , 12 படித்து முடித்தேன்.சிவில் சர்வீஸ் தேர்வுக்கு கடந்த 5 வருடங்களாக முயற்சி செய்து வருகிறேன். ஏற்கனவே 4முறை தோற்றாலும் மனம் தளராமல் போராடி தற்போது வெற்றி கிடைத்திருக்கிறது.

என்னுடைய இந்த வெற்றிக்கு காரணம் என்னுடைய குடும்பத்தினர் தொடர்ந்து உற்சாகப்படுத்தியது தான் காரணம். எனது குடும்பத்தினருக்கு எனது வெற்றியை சமர்ப்பிக்கிறேன். தொடர்ச்சியான ஆர்வமும் விடாமுயற்சியும் இருந்தால் இந்தியாவின் எந்த மூலை முடுக்கு கிராமத்தில் வசித்தாலும் IAS தேர்வில் வெல்லலாம் என அபிநயா தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com