வரும் திங்கள் முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம்.. ரயில்வே வாரியம் ஒப்புதல் !

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அறிவிக்கபட்டிருக்கும் தொடர் ஊரடங்கால் பொது போக்குவரத்து முடக்கப்பட்டிருந்தது. நான்காவது கட்ட ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் அதிகம் இருந்த காரணத்தால் தமிழகத்திற்கான ரயில்சேவையை ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு மட்டுமே ரயில் சேவை செயல்படுத்தப்பட்டு வந்தது. தற்போது ஏசி இல்லாத 4
 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அறிவிக்கபட்டிருக்கும் தொடர் ஊரடங்கால் பொது போக்குவரத்து முடக்கப்பட்டிருந்தது. நான்காவது கட்ட ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா பரவல் அதிகம் இருந்த காரணத்தால் தமிழகத்திற்கான ரயில்சேவையை ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு மட்டுமே ரயில் சேவை செயல்படுத்தப்பட்டு வந்தது. தற்போது ஏசி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்குமாறு ரயில்வே வாரியத்திடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

தமிழகத்தின் கோரிக்கையை ஏற்ற இந்தியன் ரயில்வே ஜூன் 1 ஆம் தேதி முதல் தமிழகத்திற்கு 4 சிறப்பு ரயில்களை இயக்க ஒப்புதல் அளித்துள்ளது.

கோவை – மயிலாடுதுறை, மதுரை – விழுப்புரம், திருச்சி – நாகர்கோவில், கோவை – காட்பாடி ஆகிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.

A1TamilNews.com