முன்பதிவு டிக்கெட் கட்டணங்களைத் திரும்ப பெற சேவை மையங்கள்!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கால் பொதுப் போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டிருந்தது. புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக இந்தியா முழுவதும் மத்திய அரசு ரயில் சேவையை அறிவித்திருந்தது. முன்பதிவும் செய்யப்பட்ட பின்னர் கொரோனாத் தொற்று அதிகம் பரவியதால் தமிழகத்திற்கான ரயில்சேவை நிறுத்தப்பட்டது. ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே பயணக்கட்டணங்கள் செலுத்தப்பட்டன. ரயில் நிலையங்களில் நேரடியாக முன்பதிவு செய்தவர்களுக்கான பயணத் தொகையை திருப்பி அளிக்கும் வகையில் சேவை
 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கால் பொதுப் போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டிருந்தது.

புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக இந்தியா முழுவதும் மத்திய அரசு ரயில் சேவையை அறிவித்திருந்தது. முன்பதிவும் செய்யப்பட்ட பின்னர் கொரோனாத் தொற்று அதிகம் பரவியதால் தமிழகத்திற்கான ரயில்சேவை நிறுத்தப்பட்டது.

ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே பயணக்கட்டணங்கள் செலுத்தப்பட்டன.

ரயில் நிலையங்களில் நேரடியாக முன்பதிவு செய்தவர்களுக்கான பயணத் தொகையை திருப்பி அளிக்கும் வகையில் சேவை மையங்கள் சேலம், கோவை மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

மாலை 5 மணி வரையில் இந்த மையங்களில் முன்பதிவு பயணக் கட்டணங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com