பள்ளியை விட்டு நீக்கினால் கடும் நடவடிக்கை – கே.ஏ.செங்கோட்டையன் உறுதி!

அந்தியூர்: கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களை பள்ளியை விட்டு நீக்கினால், அப்படி நீக்கும் தனியார் பள்ளிகள் மிது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார். தனியார் பள்ளி ஒன்றில் கட்டணம் கட்ட முடியாத மாணவி ஒருவரை பள்ளியிலிருந்து நீக்கிய செய்தியுடன், பள்ளிக்கு வெளியே தாயாரிடம் அந்த மாணவி கலங்கி அழும் காட்சியின் படம் சமூகத் தளத்தில் வைரலாகப் பரவியது. இது குறித்து அந்தியூரில் அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த அமைச்சர்
 

அந்தியூர்: கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களை பள்ளியை விட்டு நீக்கினால், அப்படி நீக்கும் தனியார் பள்ளிகள் மிது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தனியார் பள்ளி ஒன்றில் கட்டணம் கட்ட முடியாத மாணவி ஒருவரை பள்ளியிலிருந்து நீக்கிய செய்தியுடன், பள்ளிக்கு வெளியே தாயாரிடம் அந்த மாணவி கலங்கி அழும் காட்சியின் படம் சமூகத் தளத்தில் வைரலாகப் பரவியது.

இது குறித்து அந்தியூரில் அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் கூறியதாவது,

 “தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களை நீக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்மந்தப்பட்ட குழந்தை உடனடியாகவே அதே பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார். அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் அவருக்கு இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது.

இதைப் போல் எந்த ஒரு தனியார் பள்ளியைப் பற்றியும், இரண்டு அல்லது மூன்று தடவைக்கு மேல் அரசின் கவனத்திற்கு வந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கூறியுள்ளார்.

– வணக்கம் இந்தியா