கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் மேலும் தீவிரமாக்கப்படும் ! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஜூலை31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் அது சம்பந்தமான கட்டுப்பாடுகளை தலைமைச் செயலாளர் வெளியிடப்பட்டுள்ளார். அதன் படி, திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 50 பேருக்கு மேல் அனுமதி கிடையாது. இறப்பு மற்றும் இறுதி ஊர்வலங்கள் சார்ந்த சடங்குகளில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி. வயதானவர்கள், உடல் நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே வெளியில் வர
 

மிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஜூலை31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் அது சம்பந்தமான கட்டுப்பாடுகளை தலைமைச் செயலாளர் வெளியிடப்பட்டுள்ளார்.

அதன் படி, திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 50 பேருக்கு மேல் அனுமதி கிடையாது. இறப்பு மற்றும் இறுதி ஊர்வலங்கள் சார்ந்த சடங்குகளில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி.

வயதானவர்கள், உடல் நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும். அரசு ஊழியர்கள் மட்டுமல்ல சாதாரண குடிமக்களும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து அதில் தங்களின் உடல் நிலையை தொடர்ந்து பதிவு செய்ய மாவட்ட நிர்வாகம் மூலம் அறிவுறுத்தப்படும்.

பொது இடங்களுக்கு செல்லும் பொது மக்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். பொது இடங்களில் மது அருந்துதல், பான், குட்கா, புகையிலை பயன்படுத்த தடை .பாதிப்பு அதிகம் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் கட்டுப்பாடுகள் மேலும் தீவிரமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com