வலுக்கிறது வடகிழக்கு பருவ மழை ! ஏரிகளில் வெள்ள அபாயம்!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை மற்றும் தமிழகத்தின் அநேக இடங்களில் கன மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை சற்றே ஓய்ந்திருந்த நிலையில் சென்னையில் பெரும்பாலான இடங்களில் இன்று மீண்டும் மழை பெய்து வருகிறது. கடந்த நவம்பர் 30, டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான நீர்நிலைகள் அதிக கொள்ளளவை எட்டியுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள கூத்தப்பாக்கம் உள்ளிட்ட
 

மிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை மற்றும் தமிழகத்தின் அநேக இடங்களில் கன மழை பெய்தது.
வடகிழக்கு பருவமழை சற்றே ஓய்ந்திருந்த நிலையில் சென்னையில் பெரும்பாலான இடங்களில் இன்று மீண்டும் மழை பெய்து வருகிறது.

கடந்த நவம்பர் 30, டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான நீர்நிலைகள் அதிக கொள்ளளவை எட்டியுள்ளது.

காஞ்சிபுரத்தில் உள்ள கூத்தப்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் ஏற்கனவே உடைந்துவிட்டதால் தென்னேரியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாம்பரத்தில் ஒரே நாளில் மழை கொட்டி தீர்த்ததால் அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தன.
இந்த நிலையில் டிசம்பர் 3-ஆம் தேதி முதல் மழை படிப்படியாக குறைந்தது.

இன்று சென்னையில் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், வளசரவாக்கம், போரூர், ராமாபுரம், அடையாறு, முகப்பேர் மேற்கு, கிழக்கு, அண்ணாநகர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை பரவலாக மழை பெய்து வருகிறது.

https://www.A1TamilNews.com