துணை முதலமைச்சர் ஒபிஎஸ் சகோதரர் ராஜாவுக்கு கொரோனா!!

தேனி மாவட்டத்திலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் துணை முதலமைச்சர் வீட்டிற்குள்ளேயும் கொரோனா புகுந்து விட்டது. துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஒ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மதுரையில் தனியார் மருத்துவமனை கட்டுப்பாட்டிலுள்ள விடுதியில் தனிமை முகாமில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்ட ஆவின் தலைவராக ஒ.ராஜா பதவி வகித்து வருகிறார். திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்த சம்பவத்தை, “ஒன்றிணைவோம் வா” திட்டத்தால் தான் ஒரு எம்.எல்.ஏவை இழந்து
 
தேனி மாவட்டத்திலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் துணை முதலமைச்சர் வீட்டிற்குள்ளேயும் கொரோனா புகுந்து விட்டது.
 

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஒ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் மதுரையில் தனியார் மருத்துவமனை கட்டுப்பாட்டிலுள்ள விடுதியில் தனிமை முகாமில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்ட ஆவின் தலைவராக ஒ.ராஜா பதவி வகித்து வருகிறார். 

 
திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்த சம்பவத்தை, “ஒன்றிணைவோம் வா” திட்டத்தால் தான் ஒரு எம்.எல்.ஏவை இழந்து விட்டோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து இருந்தார்.
 
அதிமுக எம்.எல்.ஏ பழனி, முதலமைச்சரின் தனிச்செயலாளர் என ஆளும் கட்சியையும் விடாத கொரோனா தற்போது துணை முதலமைச்சரின் சகோதரரையும் பிடித்துக் கொண்டது. இதற்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறார் முதலமைச்சர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.