புலம் பெயர் தொழிலாளர்கள் தமிழகம் திரும்ப வழிகாட்டு நெறிமுறைகள்! தமிழக அரசு அரசாணை!

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. மார்ச் 25முதல் தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் நாடு முழுவதும் உற்பத்தி, உள்கட்டமைப்பு, வினியோகம் என அனைத்து தொழில்துறைகளும் முடக்கப்பட்டுள்ளன. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஊரடங்கால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். சொந்த ஊரை விட்டு வெளி மாநிலங்களில் வேலைக்கு சென்ற அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தங்கள் சொந்த
 

ந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. மார்ச் 25முதல் தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் நாடு முழுவதும் உற்பத்தி, உள்கட்டமைப்பு, வினியோகம் என அனைத்து தொழில்துறைகளும் முடக்கப்பட்டுள்ளன. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஊரடங்கால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். சொந்த ஊரை விட்டு வெளி மாநிலங்களில் வேலைக்கு சென்ற அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தங்கள் சொந்த ஊர் போய் சேர்ந்தனர்.

தமிழ்நாட்டில் பீகார், அஸ்ஸாம், உத்தரபிரதேசம், ஜார்கண்ட் என பல்வேறு வட மாநிலங்களை சேர்ந்த 3லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் அவர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறினர்.

ஏற்கனவே தங்களிடம் வேலைபார்த்து வந்த வட மாநில தொழிலாளர்களையும் மீண்டும் அழைத்து வர தமிழக நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து உள்ளன.இதனைத் தொடர்ந்து அந்த நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் வெளி மாநில தொழிலாளர்களை அனுமதிக்க பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி தொழிலாளர்களை கம்பெனி தனது சொந்த செலவில் பஸ் அல்லது வேன் மூலம் அழைத்து வர வேண்டும். வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வர விரும்பும் நிறுவனம் அல்லது மனிதவள ஏஜென்சிகள், அந்த தொழிலாளர்களின் பெயர், வீட்டு முகவரி, ஆதார் எண், செல்போன் எண், பணியிடத்தின் முகவரி, வாகனத்தின் விவரங்கள், தனிமைப்படுத்தும் இடம் பற்றிய விபரங்களை மாவட்ட கலெக்டரிடம் அளித்து ‘இ-பாஸ்’ பெற வேண்டும்.

ஒவ்வொரு ஊழியருக்கும் கம்பெனிகள் சொந்த செலவில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். 14 நாட்கள் தனிமை முடித்தபின் கொரோனா அறிகுறி இல்லாதவர்களை வேலைக்கு அமர்த்தலாம்.

பணியிடங்களில் சோப் மூலம் கைகழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தொழிலாளர்கள் தங்கும் இடத்தில் காற்றோட்ட வசதி, சுகாதாரம் பேணப்படவேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

A1TamilNews.com