பேருந்துகளில் கட்டண உயர்வு கிடையாது! பழைய கட்டணமே தொடரும்!தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் பாதிப்பு அதிகம் உள்ள 15 மாவட்டங்களில் ஐந்தாவது கட்ட ஊரடங்கு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. பாதிப்பின் அளவைப் பொறுத்து நாடு முழுவதும் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன் படி இன்று முதல் 50 சதவீதப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 60 சதவீத பயணிகளுடன் தனியார் பேருந்துகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறைவான
 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் பாதிப்பு அதிகம் உள்ள 15 மாவட்டங்களில் ஐந்தாவது கட்ட ஊரடங்கு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. பாதிப்பின் அளவைப் பொறுத்து நாடு முழுவதும் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன் படி இன்று முதல் 50 சதவீதப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

60 சதவீத பயணிகளுடன் தனியார் பேருந்துகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறைவான பயணிகளைக் கொண்டு இயக்கப்பட வேண்டும் ஆதலால் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்து முடிவு செய்த பின்னரே தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என தனியார் போக்குவரத்துக் கழகங்கள் அறிவித்துள்ளன.

அரசுப் பேருந்துகளில் குறைவான எண்ணிக்கையில் பயணிகள் பயணம் செய்தாலும் கட்டண உயர்வு எதுவும் கிடையாது. பழைய கட்டணங்களே வசூலிக்கப்படும் என அரசு போக்கு வரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

பயணிகள் பேருந்துகளிலும், பொது இடங்களிலும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். நடத்துனர், ஓட்டுனர்,பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

A1TamilNews.com