அறிவாலயத்தில் கொடியேற்றிய மு.க.ஸ்டாலின்!

74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திமுக தலைமை அலுவலகமான அறிவாலயம் வளாகத்தில் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். ஜனநாயகம், மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை, சமூகநீதி, கூட்டாட்சித் தத்துவம்- ஆகியவற்றை நமக்கு அளித்துள்ள சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த தியாகிகளின் தியாகங்களை எண்ணிப் போற்றுவோம். சாதி, மத, இன வேறுபாடுகளை தூக்கியெறிந்து – சகோதரத்துவம், சமத்துவம் என்ற பாச உணர்வோடு அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக, அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளையும், நாட்டின் பன்முகத்தன்மையையும் போற்றிப்
 

74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திமுக தலைமை அலுவலகமான அறிவாலயம் வளாகத்தில் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.

ஜனநாயகம், மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை, சமூகநீதி, கூட்டாட்சித் தத்துவம்- ஆகியவற்றை நமக்கு அளித்துள்ள சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த தியாகிகளின் தியாகங்களை எண்ணிப் போற்றுவோம்.

சாதி, மத, இன வேறுபாடுகளை தூக்கியெறிந்து – சகோதரத்துவம், சமத்துவம் என்ற பாச உணர்வோடு அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக, அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளையும், நாட்டின் பன்முகத்தன்மையையும் போற்றிப் பாதுகாத்திட உறுதியேற்கும் வகையில் அண்ணா அறிவாலயத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

A1TamilNews.com