டிச. 27, 28 தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் ?

தமிழ்நாடு: டிசம்பர் 27, 28 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2016 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல், பழங்குடியினருக்கு முறையான இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறி திமுக தொடர்ந்த வழக்கில் நிறுத்தப்பட்டது. சுமார் 3 ஆண்டுகள் ஆகியும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. தற்போது, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமையில்
 

தமிழ்நாடு: டிசம்பர் 27, 28 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2016 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல், பழங்குடியினருக்கு முறையான இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறி ‌திமுக தொடர்ந்த வழக்கில் நிறுத்தப்பட்டது. சுமார் 3 ஆண்டுகள் ஆகியும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.

தற்போது, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணை‌யம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில், தேர்தலை டிசம்பர் 27, 28 தேதிகளில் நடத்த‌ தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் நடத்துவதற்கு வசதியாக டிசம்பர் 23 ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வுகளை‌ நடத்தி முடிக்க பள்ளி கல்வித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக மாநில தேர்தல் ஆணை‌‌ய வட்டா‌ங்கள் தெரிவிக்கின்றன.

https://www.A1TamilNews.com