மீண்டும் பரபரப்பாகும் ஓ.எம்.ஆர் சாலை! 10 சதவீத ஊழியர்களுடன் செயல்பட ஐடி நிறுவனங்களுக்கு அனுமதி!

கொரோனா ஊரடங்கு காலத்தில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே பணியை தொடரும் வாய்ப்பு அமைந்தது. வீட்டிலிருந்து பணிபுரிபவர்களின் பணித்திறனும் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. போக்குவரத்து நேரத்தையும் சேர்த்து 8 மணி நேரத்திற்கும் மேல் எல்லோருமே பணி செய்து வந்துள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு சென்னை காவல்துறைக்குட்பட்ட பகுதிகளில் ஐடி நிறுவனங்களுக்கு மேலும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு. அதிகபட்சமாக 80 ஊழியர்கள், நிறுவனத்தின் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டு அலுவலகத்திலிருந்து வேலை செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
 

கொரோனா ஊரடங்கு காலத்தில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே பணியை தொடரும் வாய்ப்பு அமைந்தது. வீட்டிலிருந்து பணிபுரிபவர்களின் பணித்திறனும் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. போக்குவரத்து நேரத்தையும் சேர்த்து 8 மணி நேரத்திற்கும் மேல் எல்லோருமே பணி செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசு சென்னை காவல்துறைக்குட்பட்ட பகுதிகளில் ஐடி நிறுவனங்களுக்கு மேலும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு.

அதிகபட்சமாக 80 ஊழியர்கள், நிறுவனத்தின் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டு அலுவலகத்திலிருந்து வேலை செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. பெரிய ஐடி நிறுவனங்களுக்கு இது போதுமான எண்ணிக்கை இல்லை என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

சென்னை காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர, மற்ற பகுதிகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் சென்று, அதிகபட்சம் 10 சதவீத பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுவதாக  அரசு அறிவித்துள்ளது.

பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முககவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்து அவசிய தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க  வேண்டும் என்று அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது

புதிய உத்தரவு மூலம் 2000 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரியும் ஐடி நிறுவனத்தில் 200 பேர் அலுவலகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறது. ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்படும் ஓ.எம்.ஆர் என்று அழைக்கப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் மீண்டும் போக்குவரத்து களைகட்டத் தொடங்கும்.

A1TamilNews.com