பாஜக வால் ஆட்சியை இழக்கிறாரா எடப்பாடி பழனிசாமி?

 

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் முன்னிலை நிலவரம் தெரியத் தொடங்கியுள்ளது 224 தொகுதிகளில் 134 இடங்களில் திமுகவும் 89 இடங்களில் அதிமுகவும் முன்னிலை வகித்து வருகின்றன.

திமுகவுக்கு 160க்கும் மேற்பட்ட தொகுதிகளில் கிடைக்கும் என்று கூறப்பட்ட நிலையில் 134தொகுதிகளில் மட்டுமே திமுக கூட்டணி முன்னிலை வகிப்பது மு.க.ஸ்டாலின் உள்பட முன்னணித்தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

அதிமுக கூட்டணிக்கு 89 இடங்களில் முன்னிலை கிடைத்துள்ளது  பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசன், சீமான் இருவரும் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை பிரித்துள்ளார்களா என்று இன்னும் தெரியவில்லை. ஆனால் டிடிவி தினகரன் அதிமுக வாக்குகளை பிரித்த நிலையிலும் 89 இடங்களில் அதிமுக முன்னணி என்பது மிகவும் கவனிக்கத்தக்க விஷயமாகும்.

ஆக, எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி குறைவாக இருப்பதாகத் தான் கருத வேண்டியுள்ளது. அதே வேளையில் பாஜக மீதான் அதிருப்தி தமிழ்நாட்டில் அதிக அளவில் இருப்பது வெளிப்படையான ஒன்றாகும். ஒரு வேளை பாஜகவை கூட்டணியில் சேர்க்காமல் இருந்திருந்தால் மீண்டும் ஆட்சியைப்  பிடித்திருப்பாரோ எடப்பாடி பழனிசாமி என்ற கேள்வியும் எழுகிறது.

தமிழ்நாட்டு அரசியல் மு.க.ஸ்டாலின் vs எடப்பாடி பழனிசாமி என்ற நிலையை அடைந்துள்ளது என்றே கூறலாம்.