தமிழகத்தில் கொரோனா பரவல் குறைகிறதா? அதிகரிக்கிறதா?

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3,756 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 34,962 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 3,756 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 3,693 பேர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 63 பேர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,22,350 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 13,87,322 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 64 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் மொத்த உயிரிழப்பு 1,700 ஆக
 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3,756 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று மட்டும்  34,962 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 3,756 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 3,693 பேர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 63 பேர்.

மொத்த பாதிப்பு  எண்ணிக்கை 1,22,350 ஆக அதிகரித்துள்ளது.  இதுவரை 13,87,322 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் 64 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் மொத்த உயிரிழப்பு 1,700 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 3,051 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையிலும் 74,167 பேர் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

சென்னை 1,261, மதுரை 379 , திருவள்ளூர் 300. செங்கல்பட்டு 273 பேர் என முக்கிய மாவட்டங்களில் பாதிப்பு நேற்று இருந்தது. சென்னை அடுத்ததாக அதிகமாக பரவும் மதுரையில் மொத்த பாதிப்பு 5,057 ஆக உயர்ந்துள்ளது.

மதுரையில் பரவல் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் கொரோனா பரவல் கட்டுக்குள் வருவதாகக் கூறப்படுகிறது.

A1TamilNews.com