ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.5,000! முதல்வர் எடப்பாடி!

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்திய பின்னர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் எடப்பாடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். விவசாயிகள், தொழில்முனைவோர்களின் கோரிக்கைகள் அனைத்தும் துறை சார்ந்த வல்லுநர்கள் மூலம் அரசு பரிசீலனை செய்து வருகிறது. மாவட்டம் தோறும் பிளாஸ்மா வங்கிகள் துவங்கப்பட்டு, பிளாஸ்மா தானம் பெறப்பட்டு, தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு
 

மிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவித்து வருகிறது.

அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்திய பின்னர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் எடப்பாடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விவசாயிகள், தொழில்முனைவோர்களின் கோரிக்கைகள் அனைத்தும் துறை சார்ந்த வல்லுநர்கள் மூலம் அரசு பரிசீலனை செய்து வருகிறது. மாவட்டம் தோறும் பிளாஸ்மா வங்கிகள் துவங்கப்பட்டு, பிளாஸ்மா தானம் பெறப்பட்டு, தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன் வர வேண்டும். திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரியில் 100 இடங்கள் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு செல்பவர்கள் இ-பாஸ்முறையை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்காக 500 புதிய ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணிபுரியும் அவசரகால பணியாளர்களுக்கு ரூ. 5,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com