திமுக ஜெ.அன்பழகன் என்ன இப்படி கொரொனாவால செத்துட்டாரு ப்ரோ?

ப்ரோ, திமுக ஜெ.அன்பழகன் என்ன இப்படி கொரொனாவால செத்துட்டாரு.? என்ன செய்றது ப்ரோ, மோடி மாதிரி, மத்த, பிஜேபி தலைவர்கள் மாதிரி, அதிமுக, பாமக தலைவர்கள் போல, ரஜினி கமல் சீமான் மாதிரி வீட்டுக்குள்ளேயே உக்காந்துட்டு இருந்தா, இப்படி கொரோனாவால செத்து இருக்க மாட்டார் தான்.. ஆனா, வருமானம் இல்லாம, அத்தியாவசிய பொருட்கள் இல்லாம, அடுத்தவேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் லட்சக்கணக்கான குடும்பங்களை, பசியால் வாடும் குழந்தைகள, பார்த்துகிட்டு வீட்டில சும்மா உட்கார முடியாம, தங்களால்
 

 

 

ப்ரோ, திமுக ஜெ.அன்பழகன் என்ன இப்படி கொரொனாவால செத்துட்டாரு.?

என்ன செய்றது ப்ரோ, மோடி மாதிரி, மத்த, பிஜேபி தலைவர்கள் மாதிரி, அதிமுக, பாமக தலைவர்கள் போல, ரஜினி கமல் சீமான் மாதிரி வீட்டுக்குள்ளேயே உக்காந்துட்டு இருந்தா, இப்படி கொரோனாவால செத்து இருக்க மாட்டார் தான்..

ஆனா, வருமானம் இல்லாம, அத்தியாவசிய பொருட்கள் இல்லாம, அடுத்தவேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் லட்சக்கணக்கான குடும்பங்களை, பசியால் வாடும் குழந்தைகள, பார்த்துகிட்டு வீட்டில சும்மா உட்கார முடியாம, தங்களால் இயன்ற உதவிகள அந்த மக்களுக்கு, வெளியே போய் செஞ்சதால தானே அவருக்கு இந்த தொற்று வந்துச்சு…

அவர் என்ன இந்த கொரோனா காலத்துல கூட விடாம தேர்தல் பிரச்சாரம் செய்யும் பிஜேபி அமித்ஷா போல செய்தாரா?? கட்சிக் கூட்டங்களை நடத்தினாரா?? தனக்கு ஏற்கனவே இருந்த சில வியாதிகள கூட கண்டுக்காம, தைரியமா மக்கள் பணி செய்தார். “உங்களுக்கு உடல்நலம் சரி இல்லை அதனால் வெளியே வரவேண்டாம் வீட்டுக்குள்ளே இருங்கள்” என கட்சித் தலைமை பலமுறை வலியுறுத்தி சொன்னபோது கூட, விடாமல் மக்கள் மத்தியில் பணியாற்றினார். அதுதான் ஒரு உண்மையான மக்கள் பிரதிநிதியின் கடமை, வீட்டுக்குள் ஓடி ஒளிந்து கொள்வது அல்ல..

இந்த கொரொனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், மக்கள் மத்தியில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் என பலரும் தங்கள் உயிர்களை தியாகம் செய்து இருக்காங்க.. அவர்களைப் போலத்தான் இவரும்.

– ஜே.பி.பிரகாஷ்

A1TamilNews.com