வீடு வீடாக டோக்கன் முறையில் நிவாரணத் தொகை! தமிழக அரசு நடவடிக்கை!

சர்வதேச அளவில் உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரானோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை அத்தியாவசிய பொருட்களான பால், மளிகை, மருந்தகங்கள் அனைத்தும் நேர கட்டுப்பாட்டில், மதியம் 2.30 மணி வரையில் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரானோ தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசு நிவாரணத் தொகையை அறிவித்திருந்தது. ரேஷன் கார்டுகளுக்கு ரூபாய் 1000 த்துடன், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை என அனைத்துப் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என
 

ர்வதேச அளவில் உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரானோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை அத்தியாவசிய பொருட்களான பால், மளிகை, மருந்தகங்கள் அனைத்தும் நேர கட்டுப்பாட்டில், மதியம் 2.30 மணி வரையில் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொரானோ தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசு நிவாரணத் தொகையை அறிவித்திருந்தது. ரேஷன் கார்டுகளுக்கு ரூபாய் 1000 த்துடன், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை என அனைத்துப் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்திருந்தார்.

இந்த நிவாரணங்களைப் பெறுவதற்காக, ரேஷன் கடையில் மக்கள் கூட்டம் சேர்வதை தடுக்கும் பொருட்டு வருவாய்த் துறை சார்பில் வீடு வீடாக, ‘டோக்கன்’ வழங்கப்படும். ரேஷன் கடை ஊழியர், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தன்னார்வ அமைப்பினர் இணைந்து, வீடு வீடாக ‘டோக்கன்’ வழங்கப்படும்.

இதில் பெற்றுக் கொள்ள வேண்டிய நாளும், நேரமும் குறிப்பிடப்பட்டிருக்கும். ஏப்ரல் 2 முதல் 15ம் தேதி வரை வழங்கப்பட இருக்கிறது.

A1TamilNews.com