ஆன்லைனில் தனியார் பள்ளிக் கட்டண விவரம் – ஒரு மாதம் கெடு வைத்த உயர்நீதிமன்றம்!

மதுரை: தனியார் பள்ளிக் கட்டண விவரங்களை கடந்த ஆண்டு ஏப்ரல் 30ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு இருந்தது. மேலும் 3 மாச அவகாசம் கேட்டு அரசுத் தரப்பில் கூறப்பட்டது. ஒரு மாதத்திற்குள் வெப்சைட்டில் விவரம் வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மதுரையைச் சேர்ந்த ஹக்கீம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில் 2018- 21 ம் ஆண்டுக்கான தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. வெளிப்படைத் தன்மை
 

மதுரை: தனியார் பள்ளிக் கட்டண விவரங்களை கடந்த ஆண்டு ஏப்ரல் 30ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு இருந்தது. மேலும் 3 மாச அவகாசம் கேட்டு அரசுத் தரப்பில் கூறப்பட்டது. ஒரு மாதத்திற்குள் வெப்சைட்டில் விவரம் வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த ஹக்கீம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில் 2018- 21 ம் ஆண்டுக்கான தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. வெளிப்படைத் தன்மை இல்லாமல் இஷ்டம் போல் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று வழக்கு தொடுத்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்து  பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர், மெட்ரிக்குலேஷன் தொடக்கப் பள்ளி இயக்குனர், தனியார் பள்ளிக்கல்வி கட்டண நிர்ணயக்குழுவின் சிறப்பு அதிகாரி ஆகியோர் கடந்த ஆண்டு ஏப்ரல் 30ம் தேதிக்குள் வெப்சைட்டில் வெளியிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தார்கள். ஆனால் கால அவகாசம் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

மீண்டும் இந்த வழக்கு நிதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மேலும் 3 மாத கால அவகாசம் கேட்ட அரசுத் தரப்பின் கோரிக்கை நிராகரிக்கப் பட்டது. இன்னும் ஒரு மாதத்திற்குள் தனியார் பள்ளிகளின் கட்டண விவரங்களை ஆன்லைன் வெப்சைட்டில் வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.

வெளிப்படையான கட்டண அறிவிப்பின் மூலம் தனியார் கல்வி நிறுவனங்களின் கொள்ளை முற்றிலும் தடுக்கப்படுமா என்பதுவும் கேள்வியே!

– வணக்கம் இந்தியா