தமிழகத்திற்கு பெரும் ஆபத்து! மாநில அரசு எச்சரிக்கை!

கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகிறது. பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்துவதிலும், சிகிச்சை அளிப்பதிலும் தீவிர முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. மார்ச் 8,9,10ம் தேதிகளில் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் இஸ்லாமியர்கள் மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட 1131 பேர் தமிழகத்திற்கு வந்துள்ளனர். தெலுங்கானாவிற்கு சென்ற 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில்,
 

கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகிறது.

பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்துவதிலும், சிகிச்சை அளிப்பதிலும் தீவிர முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

மார்ச் 8,9,10ம் தேதிகளில் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் இஸ்லாமியர்கள் மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட 1131 பேர் தமிழகத்திற்கு வந்துள்ளனர். தெலுங்கானாவிற்கு சென்ற 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், அவர்கள் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் தமிழகம் வந்த 1131 பேரில் 515 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதம் இருப்பவர்களின் மொபைல் எண்களும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதால் 616 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

இவர்கள் தாமாக முன்வந்து சிகிச்சையை ஏற்றுக் கொள்வதன் மூலம் அவர்களது குடும்பம் மற்றும் சமூகத்தினரை கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்றலாம் என தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார்.

A1TamilNews.com