பொங்கல் விடுமுறைக்கு மாணவர்கள் பள்ளிக்கு வருமாறு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை! பள்ளி கல்வித்துறை

தமிழகம்: பிரதமர் மோடி ஜனவரி 16ஆம் தேதி ஆற்றும் உரையைக்காண மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தேர்வு பயத்தை போக்குவது குறித்து டெல்லியில் உள்ள மைதானத்தில் பிரதமருடன் நாடு முழுவதும் கட்டுரை போட்டிகள் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் நேரில் கலந்துரையாட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன் நேரலையை அனைத்து மாணவர்களும் தொலைக்காட்சி மற்றும் ஆன்ட்ராய்டு போன் மூலமும் காணலாம் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
 

மிழகம்: பிரதமர் மோடி ஜனவரி 16ஆம் தேதி ஆற்றும் உரையைக்காண மாணவர்கள் ப‌ள்ளிக்கு வரவேண்டும் என எந்த உத்தரவும் பிற‌ப்பிக்கப்படவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தேர்வு பயத்தை போக்குவது குறித்து டெல்லியில் உள்ள மைதானத்தில் பிரதமருடன் நாடு முழுவதும் கட்டுரை போட்டிகள் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் நேரில் கலந்துரையாட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதன் நேரலையை அனைத்து மாணவர்களும் தொலைக்காட்சி மற்றும் ஆன்ட்ராய்டு போன் மூலமும் காணலாம் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. வீடுகளில் பார்க்க இயலாத மாணர்களுக்காக பள்ளிகளில் தொலைக்காட்சி வைத்து ஏற்பாடு செய்ய பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.‌

16 ஆம் தேதி விடுமுறை நாள் என்பதால் பள்ளிக்கு வர வேண்டுமா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. வீடுகளில் பார்க்க இயலாத விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வந்து பார்ப்பதற்காகவே பள்ளிகளில் ஏற்பாடு செய்ய சொல்லியிருப்பதாக பள்ளிக் கல்வி இயக்குநர் விளக்கமளித்தார். ‌

இதுபற்றி அமைச்சர் செங்கோட்டையனிடம் புதிய தலைமுறை கேட்டபோது, ஜனவரி 16 ஆம் தேதி பிரதமர் உரையை காண பள்ளிக்கு வரவேண்டும் என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை‌ என்று விளக்கம் அளித்துள்ளார்.

https://www.A1TamilNews.com