தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு

 

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக திமுக தலைமையிலான மு.க. ஸ்டாலின் அரசு பொறுப்பேற்றதும் அரசு துறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், பல ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில் இன்று மேலும் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது,

தீயணைப்புத்துறை டிஜிபியாக கரண் சிங்காவும், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய தலைவராக ஏ.கே.விஸ்வநாதனும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக வன்னிய பெருமாள் மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு ஏடிஜிபியாக ஆபாஷ் குமார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும்,சென்னை தலைமையகத்தின் கூடுதல் டிஜிபியாக சங்கர், சமூக நீதி மற்றும் மனித உரிமையின் கூடுதல் டிஜிபியாக ஜெயராம், சென்னை தலைமையகத்தின் கூடுதல் டிஜிபியாக அமல்ராஜ் பதவி உயர்வுடன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.