மீண்டும் ட்ரெண்டாகும் #GoBackModi … ஜி ஜின்பிங்-க்கு வரவேற்பு?

சென்னை: பிரதமர் மோடியையும் சீன அதிபர் ஜி ஜின்பிங்-ஐயும் வரவேற்க சென்னை முதல் மாமல்லபுரம் வரை ஏற்பாடுகள் நடந்துள்ள நிலையில் கோ பேக் மோடி ஹேஷ் டேக் ட்விட்டரில் மீண்டும் ட்ரெண்டாகி வருகிறது. தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்த போது #GoBackModi ஹேஷ்டேக் இந்திய அளவிலும் உலக அளவிலும் ட்ரெண்டிங் ஆனது. அதன் பிறகு பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும் ஒவ்வொரு தடவையும் இதே ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
 

சென்னை: பிரதமர் மோடியையும் சீன அதிபர் ஜி ஜின்பிங்-ஐயும் வரவேற்க சென்னை முதல் மாமல்லபுரம் வரை ஏற்பாடுகள் நடந்துள்ள நிலையில் கோ பேக் மோடி ஹேஷ் டேக் ட்விட்டரில் மீண்டும் ட்ரெண்டாகி வருகிறது.

தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்த போது #GoBackModi ஹேஷ்டேக் இந்திய அளவிலும் உலக அளவிலும் ட்ரெண்டிங் ஆனது. அதன் பிறகு பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும் ஒவ்வொரு தடவையும் இதே ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

சீன அதிபரை சந்திப்பதற்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்த பிரதமர் மோடி, இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தையும் அங்கே நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். பல்லவர் ஆட்சிக்காலத்தில் சீனாவுடன் உள்ள உறவு பற்றி சுட்டிக்காட்டுவதாகவும் மாமல்லபுரம் தேர்வு அமைந்ததாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் ஐநாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று முழங்கினார். சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் உலகின் முக்கியமான மூத்த மொழி தமிழ்மொழி என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில் சீன அதிபருடன் தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிராக #GoBackModi மீண்டும் ட்ரெண்ட் ஆகி உள்ளது. அதை சீன மொழியிலும் எழுதியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. சில ட்வீட்ட்களில் தமிழ்நாடு ஜி ஜின்பிங் – ஐ வரவேற்கிறது போன்ற மீம்ஸ்களையும் இணைத்துள்ளார்கள்.

– வணக்கம் இந்தியா