ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம்! முதல்வர் எடப்பாடி தொடங்கி வைப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுஇடங்களில் நடமாடும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முககவசம் அணியவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழக முதல்வர் எடப்பாடி தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச முகக்கவசங்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை 2.08 கோடி. இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 2 தரமான மறு பயன்பாட்டு முககவசங்கள்
 

மிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பொதுஇடங்களில் நடமாடும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முககவசம் அணியவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழக முதல்வர் எடப்பாடி தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச முகக்கவசங்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை 2.08 கோடி. இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 2 தரமான மறு பயன்பாட்டு முககவசங்கள் ரேஷன் கடைகளின் மூலம் வழங்கும் வகையில், முதல் கட்டமாக பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளின் மூலம் முகக்கவசங்கள் வழங்கும் திட்டம் நேற்று முதல் செயல்படுத்தப்பட்டது.

இதன் முதல் கட்டமாக முதல்வர் எடப்பாடி தலைமைச் செயலகத்தில் நேற்று 5 பேருக்கு முகக்கவசத்தை வழங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

A1TamilNews.com