கருணாநிதி நினைவிடத்தில் இலவச திருமணம்!மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

திமுக வின் தலைவரும்,முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 97வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்களும் நினைவாஞ்சலி செலுத்தினர். அவரது நினைவிடத்திலேயே திமுக சார்பில் ஒரு ஜோடிக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி எந்த ஆடம்பர நிகழ்ச்கிகளும் நடத்த வேண்டாம் எனவும், அதற்குப் பதிலாக கொரோனா பரவலைத் தடுக்க உதவி செய்யுமாறும் மு.க.ஸ்டாலின்
 

திமுக வின் தலைவரும்,முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 97வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்களும் நினைவாஞ்சலி செலுத்தினர்.

அவரது நினைவிடத்திலேயே திமுக சார்பில் ஒரு ஜோடிக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி எந்த ஆடம்பர நிகழ்ச்கிகளும் நடத்த வேண்டாம் எனவும், அதற்குப் பதிலாக கொரோனா பரவலைத் தடுக்க உதவி செய்யுமாறும் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொது இடங்களில் சமூக விலகலைக் கடைப்பிடித்து கொரோனா நிவாரணத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கருணாநிதியின் புகழை நிலைநாட்ட வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

A1TamilNews.com