ஊரடங்கு காலம் முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு!தமிழக அரசு மீண்டும் அறிவிப்பு!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே31ம் தேதி வரை 4வது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்கும் வகையிலும், அன்றாடம் வேலை செய்து பிழைப்பு நடத்தும் கூலி தொழிலாளிகளின் நலனுக்காகவும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் தமிழக அரசு அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவச உணவு அளித்து வந்தது. இதற்கான செலவினங்கள் தன்னார்வலர்களிடம் இருந்து வசூலிக்கபட்ட நிதியின் மூலம் வழங்கப்பட்டு வந்தது. மே19ம் தேதிவரை அம்மா உணவகங்களின் இலவச உணவுகள்
 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே31ம் தேதி வரை 4வது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்கும் வகையிலும், அன்றாடம் வேலை செய்து பிழைப்பு நடத்தும் கூலி தொழிலாளிகளின் நலனுக்காகவும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் தமிழக அரசு அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவச உணவு அளித்து வந்தது.

இதற்கான செலவினங்கள் தன்னார்வலர்களிடம் இருந்து வசூலிக்கபட்ட நிதியின் மூலம் வழங்கப்பட்டு வந்தது. மே19ம் தேதிவரை அம்மா உணவகங்களின் இலவச உணவுகள் தரப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனால் சென்னையில் செயல்பட்டு வரும் அனைத்து அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கும் முறை கைவிடப்பட்டு நேற்று முதல் மீண்டும் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

ஊரடங்கு முடியும் வரை அல்லது கொரோனா பாதிப்பு தமிழகத்தை விட்டு நீங்கும் வரை இலவச உணவு வழங்கும் முறை தொடரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு உடனடியாக கட்டணங்களை ரத்து செய்தது . மேலும் ஊரடங்கு முடியும் வரை சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவச உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் சேலம், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய இடங்களில் இயங்கி வரும் அம்மா உணவகங்களிலும் ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com