பச்சை மண்டலம் கிருஷ்ணகிரியில் கொரோனா! புட்டபர்த்தியில் இருந்து வந்ததா?

தமிழ்நாட்டின் ஒரே ஒரு பச்சை மண்டலாக இருந்து வந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 67 வயது விவசாயிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர் புட்டபர்த்தி சாய்பாபா கோயிலுக்கு உழவாரப் பணிக்காகச் சென்றுள்ளார். ஒரு வாரம் முன்னதாக ஊருக்குத் திரும்பியிருக்கிறார். இது குறித்து தகவல் அறிந்த வேப்பனஹள்ளி சுகாதாரத் துறையினர் விரைந்து சென்றனர். சம்மந்தப்பட்ட விவசாயிக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். சனிக்கிழமை காலை அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.
 

மிழ்நாட்டின் ஒரே ஒரு பச்சை மண்டலாக இருந்து வந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 67 வயது விவசாயிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இவர் புட்டபர்த்தி சாய்பாபா கோயிலுக்கு உழவாரப் பணிக்காகச் சென்றுள்ளார். ஒரு வாரம் முன்னதாக ஊருக்குத் திரும்பியிருக்கிறார். இது குறித்து தகவல் அறிந்த வேப்பனஹள்ளி சுகாதாரத் துறையினர் விரைந்து சென்றனர்.

சம்மந்தப்பட்ட விவசாயிக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். சனிக்கிழமை காலை அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

பச்சை மண்டலம் கிருஷ்ணகிரி ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புட்டபர்த்தி சென்று வந்த பிறகு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அதிகாரிகள் மேலும் தகவல்கள் சேகரித்து வருகின்றனர்.

www.A1TamilNews.com