காவேரிடெல்டா பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மை மண்டலம் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

காவேரி டெல்டா பகுதியின் எட்டு மாவட்டங்கள் உள்ளடக்கிய பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மை மண்டலமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அண்மையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு சுற்றுச்சுழல் அமைச்சகத்தின் அனுமதி மற்றும் விவசாயிகளின் அனுமதி பெறத் தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. இதன் படி ஸ்டெர்லைட் வேதாந்தா, ஓ.என்.ஜி.சி நிறுவனங்கள் எந்த இடத்திலும், அனுமதியில்லாமலேயே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் நிலை ஏற்பட்டது. காவேரி டெல்டா பகுதியில் இதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
 

காவேரி டெல்டா பகுதியின் எட்டு மாவட்டங்கள் உள்ளடக்கிய பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மை மண்டலமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

அண்மையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு சுற்றுச்சுழல் அமைச்சகத்தின் அனுமதி மற்றும் விவசாயிகளின் அனுமதி பெறத் தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. இதன் படி ஸ்டெர்லைட் வேதாந்தா, ஓ.என்.ஜி.சி நிறுவனங்கள் எந்த இடத்திலும், அனுமதியில்லாமலேயே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் நிலை ஏற்பட்டது. காவேரி டெல்டா பகுதியில் இதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கினர். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்தார்கள்.

இந்நிலையில் காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மை மண்டலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது, விவசாயிகளிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்து இதற்கான சட்ட வடிவத்தை முறைப்படி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் கூறியுள்ளார். இவ்வாறு மாநில அளவில் இயற்றப்படும் சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தேவையா? அல்லது மாநில அதிகார வரம்புக்கு உட்பட்டதா என்ற கேள்விகளும் உடன் எழுகிறது.

விவசாயிகளை பாதிக்கும் எந்தத் திட்டத்திற்கும் மாநில அரசு அனுமதி வழங்காது. ஒரு விவசாயியாக, சக விவசாயிகளின் வலியை நன்றாக அறிவேன் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மத்திய அரசின் அறிவிப்பு எதிராக காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மை மண்டலமாக அறிவித்துள்ளதன் மூலம், பாஜகவை எதிர்க்கத் துணிந்து விட்டாரா எடப்பாடி பழனிசாமி என்ற கேள்வியும் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

https://A1TamilNews.com