ஷாக் அடிக்கும் மின் கட்டணம்! அதிர்ச்சியில் பொது மக்கள்!!

மார்ச் மாதம் 23ம் தேதி தொடங்கி கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக ஊரடங்கு அமலில் இருப்பதால், மின்சார வாரிய ஊழியர்களால் வீடுகளில் ரீடிங் எடுக்க முடியவில்லை. பிப்ரவரி மாத கட்டணத்தையே அடுத்தடுத்த பில்களுக்கான கட்டணத் தொகையாக கட்டி வந்தனர். இந்நிலையில் மின்சார வாரிய ஊழியர்கள் மீட்டர் ரீடிங் எடுத்து புதிய பில்களை வழங்கி வருகிறார்கள். அதில் முந்தைய ரீடிங்க்கும் தற்போதைய ரீடிங்குக்கும் உள்ள வித்தியாசம் மின்சார உபயோக யூனிட்களாக கணக்கிடப்படுகிறது. இடைப்பட்ட காலத்தில் கட்டிய தொகையை கழித்து
 

மார்ச் மாதம் 23ம் தேதி தொடங்கி கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக ஊரடங்கு அமலில் இருப்பதால், மின்சார வாரிய ஊழியர்களால் வீடுகளில் ரீடிங் எடுக்க முடியவில்லை.

பிப்ரவரி மாத கட்டணத்தையே அடுத்தடுத்த பில்களுக்கான கட்டணத் தொகையாக கட்டி வந்தனர். இந்நிலையில் மின்சார வாரிய ஊழியர்கள் மீட்டர் ரீடிங் எடுத்து புதிய பில்களை வழங்கி வருகிறார்கள்.

அதில் முந்தைய ரீடிங்க்கும் தற்போதைய ரீடிங்குக்கும் உள்ள வித்தியாசம் மின்சார உபயோக யூனிட்களாக கணக்கிடப்படுகிறது. இடைப்பட்ட காலத்தில் கட்டிய தொகையை கழித்து விட்டு மீதித் தொகை கட்டுமாறு பில்கள் வந்த வண்ணம் உள்ளது.

இந்த கட்டணத்தொகையை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிப்ரவரி மாதம் ஃபேன்கள், ஏசி அதிக உபயோகம் இல்லாமல் இருந்ததும், இடைப்பட்ட காலத்தில் வீட்டிலேயே இருக்க நேரிட்டதால் உபயோகம் அதிகரித்துள்ளதாலும்,  அதிகமான யூனிட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

புதிய பில் தொகையைப் பார்த்த பலரும் ஷாக் ஆகி மீட்டரில் கோளாறு என்று புகார் செய்தவாறும் உள்ளனர். மின்வாரிய அதிகாரிகளோ, ஊரடங்கில் அனைவரும் வீட்டிலேயே இருக்க நேரிட்டுள்ளதால் பகல் நேர மின் உபயோகம் பல மடங்கு அதிகரித்துள்ளதும், இடைப்பட்ட காலத்தில் குறைந்த கட்டணம் செலுத்தியதும் தான் காரணம் என்று கூறுகின்றனர்.

கொரோன ஷாக்கைத் தொடர்ந்து இப்போது மின்சாரம் ஷாக் அடிக்கிறது!!

A1TamilNews.com