விடியா அரசில் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை - எடப்பாடி பழனிசாமி

 

விடியா அரசில்  காவலர்களுக்கே பாதுகாப்பில்லை என்பது நிதர்சனம் ஆகியிருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை அருகே கீரனூரில்  ஆடு திருடியவர்களை துரத்திச் சென்று பிடிக்க முற்பட்ட போது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீசார்  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், எஸ்.ஐ. படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் மூலம் இந்த விடியா அரசில்  காவலர்களுக்கே பாதுகாப்பில்லை என்பது நிதர்சனம் ஆகியிருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘சமூக விரோதிகளால் திருச்சி, நவல்பட்டு காவல்நிலைய எஸ்.ஐ திரு.பூமிநாதன் சமூக விரோதிகளால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.  

அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன், அரசின் சார்பாக 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

விரைவில் கொலையாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்று தருமாறு கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் இந்த விடியா அரசில்  காவலர்களுக்கே பாதுகாப்பில்லை என்பது நிதர்சனம் ஆகியிருக்கிறது.” என்று பதிவிட்டுள்ளார்.