ஊரடங்கு உத்தரவால் பரவும் கள்ளச்சாராய கலாசாரம்! 4,725 லிட்டர் பறிமுதல்!

கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகிறது. பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்துவதிலும், சிகிச்சை அளிப்பதிலும் தீவிர முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. மதுபானக்கடைகள் அடைக்கப்பட்டதன் காரணமாக மதுபானப் பிரியர்கள் கேரளாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழகத்தைப் பொறுத்த வரை சில இடங்களில் மதுப்பாட்டில்களை முன்கூட்டியே வாங்கி வைத்து ,இப்போது கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது வருவதும்
 

கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகிறது.

பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்துவதிலும், சிகிச்சை அளிப்பதிலும் தீவிர முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

மதுபானக்கடைகள் அடைக்கப்பட்டதன் காரணமாக மதுபானப் பிரியர்கள் கேரளாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழகத்தைப் பொறுத்த வரை சில இடங்களில் மதுப்பாட்டில்களை முன்கூட்டியே வாங்கி வைத்து ,இப்போது கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது வருவதும் நடந்து வருகிறது.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அருகே மதுக்கடைகள் மூடப்பட்டதால் எரிசாராயம் காய்ச்சிய நிகழ்வு நடந்துள்ளது.

தகவல் அடிப்படையில் ஒரு வீட்டில் புகுந்து அதிரடியாக சோதனை நடத்திய போலீசார், அங்கு 4,725 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்தனர்.

அந்த வீட்டில் 135 கேன்களில் பதுக்கி வைக்கப்பட்ட எரிசாராயத்தை மாவட்ட போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

A1TamilNews.com