கவுன்சிலர்களே மேயரைத் தேர்ந்தெடுக்கலாம்! அமைச்சரவையில் ஆலோசனை!

தமிழகத்தில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட இருப்பதையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் பரபரப்பான தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த மாதம் நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மேயர்களை மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான அவரச சட்டத்தை கொண்டு வருவதற்கு தமிழக அமைச்சரவை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்படி மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கு மறைமுக தேர்தலைக்
 

தமிழகத்தில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட இருப்பதையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் பரபரப்பான தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த மாதம் நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மேயர்களை மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான அவரச சட்டத்தை கொண்டு வருவதற்கு தமிழக அமைச்சரவை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்படி மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கு மறைமுக தேர்தலைக் கொண்டு வந்தால், தமிழகத்தில் சென்னை உட்பட 15 மாநகராட்சி மேயர்களை கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கும் முறை கொண்டு வரப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://www.A1TamilNews.com