உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில் தினமும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு முறைகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டு அமைச்சர் குழுக்கள் தலைமையில் தீவிரமாக கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பணிகள் நடத்தப்படுகின்றன. தமிழக அமைச்சரவையில் ஏற்கனவே எம்.எல்.ஏ அன்பழகன் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கும்
 

மிழகம் முழுவதும் கொரோனா தொற்று மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில் தினமும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு முறைகளை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டு அமைச்சர் குழுக்கள் தலைமையில் தீவிரமாக கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பணிகள் நடத்தப்படுகின்றன.

தமிழக அமைச்சரவையில் ஏற்கனவே எம்.எல்.ஏ அன்பழகன் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ‘மியாட்’ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மருத்துவமனை வளாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி கே.பி.அன்பழகனுக்கு ஆரம்பக்கட்டத்தில் எந்தவொரு அறிகுறியும் காணப்படவில்லை.

இரண்டாவதாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது என மருத்துமனை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இவரைத் தவிர தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கார்த்திகேயன், ஆர்.டி.அரசு, செஞ்சி மஸ்தான் ஆகியோரும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

A1TamilNews.com