கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு!

சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் சாம்ஜெபராஜ்.இவர் கமிஷனரை சந்திப்பதற்காக வேப்பேரி கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். நீண்ட நேரம், சுற்றித் திரிவதைப் பார்த்துக் கொண்டிருந்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.சாலை பாதுகாப்பு அதிகாரி என ஜெபராஜ் கையில் இருந்த போலி அடையாள அட்டையைக் காட்டியதாக கூறப்படுகிறது. போலி அடையாள அட்டையைக் கண்டு காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். காவல்துறையில் சாலை பாதுகாப்பு அதிகாரி என்று ஒரு பிரிவே இல்லை என்று கூறி சாம்ஜெபராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் சாம்ஜெபராஜ்.இவர் கமிஷனரை சந்திப்பதற்காக வேப்பேரி கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.

நீண்ட நேரம், சுற்றித் திரிவதைப் பார்த்துக் கொண்டிருந்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.சாலை பாதுகாப்பு அதிகாரி என ஜெபராஜ் கையில் இருந்த போலி அடையாள அட்டையைக் காட்டியதாக கூறப்படுகிறது.

போலி அடையாள அட்டையைக் கண்டு காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
காவல்துறையில் சாலை பாதுகாப்பு அதிகாரி என்று ஒரு பிரிவே இல்லை என்று கூறி சாம்ஜெபராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

லேடி லெவிங்டன் பள்ளி முதல்வரிடம் கமிஷனரை அழைத்து வருமாறு கூறி ஏமாற்றியது விசாரணையில் தெரிய வந்தது.

வேப்பேரி காவல்துறையினர் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://www.A1TamilNews.com