பேருந்து ஓட்டுநர்களை ஊக்குவிக்க முதல்வர் விருது

 

விபத்தின்றி பணிபுரியும் அரசுப் பேருந்து ஓட்டுநர்களை ஊக்குவிக்க முதல்வர் விருது வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பயணிப்போர் எண்ணிக்கை 2020 முதல் 2021 வரை மிகவும் குறைந்துள்ளது என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை சார்பில் கொள்கை விளக்கக் குறிப்பு இன்று (செப்டம்பர் 8) தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 2011 முதல் 2012-ம் ஆண்டு அரசுப் பேருந்துகளில் பயணிப்போர் எண்ணிக்கை 2.08 கோடியாக இருந்தது என்றும், 2020 முதல் 2021-ல் அரசுப் பேருந்துகளில் பயணிப்போரின் தினசரி எண்ணிக்கை 73.64 லட்சமாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்துகளை குறைக்க ஓட்டுநர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் தரப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.