10 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து..? பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை..!

 

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பை ரத்து செய்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்குள் நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி தமிழ்நாட்டில் கூடுதல் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரவு ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 1 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஜனவரி இறுதி வரை விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர். இருப்பினும், 10 முதல் 1-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொடர்ந்து பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இதனையடுத்து தற்போது,10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பை ரத்து செய்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.