#BREAKING: தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு

 

தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தின் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து, வரும் 10-ம் தேதி வரை கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவத் தொடங்கிய ஒமைக்ரான் தொற்று தற்போது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி உள்ளது. ஓமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிக அளவில் பரவி வருவதன் காரணமாக, மாநிலங்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது.

மேலும், மாநில அரசுகள் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல் படுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஒரு சில மாநிலங்களில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதனிடையே தமிழ்நாட்டில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 2,731 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில், நாளை (ஜனவரி 6) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்குமென தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.