பெங்களூரு காவல்துறையிடம் லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட தங்கம்!

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் கைப்பற்றிய நகைகளுடன் சென்ற பெங்களூர் போலிஸாரை பெரம்பலூர் போலிஸார் சேசிங் செய்து மடக்கி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலிஸாருக்கு வாக்கி டாக்கியில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து அவ்வழியே வரும் கர்நாடக பதிவு எண் கொண்ட காரை மடக்கி பிடிக்க உத்தரவு வந்தது. ரோந்து போலிஸார் கிருஷ்ணாபுரத்தில் கர்நாடக பதிவு எண்கொண்ட KA 02 AC
 

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் கைப்பற்றிய நகைகளுடன் சென்ற பெங்களூர் போலிஸாரை பெரம்பலூர் போலிஸார் சேசிங் செய்து மடக்கி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலிஸாருக்கு வாக்கி டாக்கியில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து அவ்வழியே வரும் கர்நாடக பதிவு எண் கொண்ட காரை மடக்கி பிடிக்க உத்தரவு வந்தது.

ரோந்து போலிஸார் கிருஷ்ணாபுரத்தில் கர்நாடக பதிவு எண்கொண்ட KA 02 AC 5109 இன்னோவா காரையும் அத்துடன் வந்த Press என்று ஷ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த காரையும் தடுத்துநிறுத்தி விசாரித்தனர்.

காரில் வந்தவர்கள் விசாரணையில் நாங்கள் பெங்களூர் போலிசார் என்றும் வழக்கு விஷயமாக வந்து செல்வதால் உடனடியாக கிளம்ப வேண்டும் என்றும் கூறினர். விசாரித்துக்கொண்டிருக்கும் போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெங்களூர் போலிசார் காரில் தப்பிசெல்ல முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த பெரம்பலூர் போலிசார் அடுத்தடுத்து தகவலை கொடுத்து சேசிங் செய்து மடக்கி பிடித்தனர்.

அவர்களை பெரம்பலூர் ஆயுதப்படை வளாகத்தில் வைத்து ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் பெங்களூரில் சரணடைந்த முருகன் கொடுத்த தகவல்படி தமிழகம் வந்த பெங்களூர் போலிசார் நகைகளை மீட்டுச்செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

லலிதா ஜுவல்லரியில் கொள்ளை போன நகைகளை பெங்களூரில் கணக்கு காட்டிவிடக்கூடாது என்பதற்காக பெரம்பலூர் அருகே மடக்கி பிடித்ததாக தெரிகிறது.