கரை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்..! ரெட் அலர்ட் வாபஸ்

 

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை கரையை கடந்தது.

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா கடற்பகுதிக்கும் வடதமிழக கடற்பகுதிக்கும் இடையில் சென்னைக்கு அருகே இன்று மாலை கரையைக் கடந்தது.

அப்போது மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி.மீ வரை வேகத்தில் காற்று பலமாக வீசியது.

சென்னைக்கு தெற்கே கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இதுவரை 14 பேர், மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். அதிகனமழைக்கான ரெட் அலர்ட்டை திரும்பப் பெற்றுள்ள வானிலை ஆய்வு மையம், கனமழைக்கும், பலத்த காற்றுக்குமான வாய்ப்பு தொடர்வதாகத் தெரிவித்துள்ளது.