இன்று முதல் தாஜ்மஹாலில் பார்வையாளர்களுக்கு அனுமதி!மத்திய அரசு!

இந்தியா முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த தொடர் ஊரடங்கு காரணமாக புராதன வரலாற்று நினைவுச் சின்னங்கள், சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தற்போது ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்ட தளர்வில் இந்தியா முழுவதும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வந்த வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. அந்த வரிசையில் தற்போது மேலும் பல வரலாற்று சின்னங்களையும், அருங்காட்சியகங்களையும் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இன்று முதல் டெல்லியின் பாரம்பரிய நினைவுச் சின்னங்களான
 

ந்தியா முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த தொடர் ஊரடங்கு காரணமாக புராதன வரலாற்று நினைவுச் சின்னங்கள், சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

தற்போது ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்ட தளர்வில் இந்தியா முழுவதும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வந்த வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன.

அந்த வரிசையில் தற்போது மேலும் பல வரலாற்று சின்னங்களையும், அருங்காட்சியகங்களையும் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இன்று முதல் டெல்லியின் பாரம்பரிய நினைவுச் சின்னங்களான தாஜ்மஹால், செங்கோட்டை ஆகியவை திறக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் பார்வையாளர்களுக்கு கடும் நிபந்தனைகளும், கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. பார்வையிட செல்பவர்கள் முன்னதாகவே இ-பாஸ் பெற வேண்டும் என்றும், முகக்கவசம் மற்றும் கையுறைகள் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டுதல்களை தவறாமல் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

A1TamilNews.com