கிரானைட் சுரங்க விவகாரத்தில் மு.க. அழகிரியின் மகன் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத் துறை!

மதுரை: மு.க. அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியின் 40 கோடி பெருமானமுள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. மதுரை மற்றும் சென்னையில் உள்ள தயாநிதியின்அசையும் அசையா சொத்துக்களையும் ஒலிம்பஸ் கிரானைட்ஸ் நிறுவனத்தின் வைப்பு நிதியையும் சேர்த்து 40.34 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப் பட்டுள்ளதாக அமலாக்கத் துறை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. எஸ்.நாகராஜன் மற்றும் தயாநிதி அழகிரியின் நிறுவனமான ஒலிம்பஸ் கிரானைட்ஸ் நிறுவனம் சட்டத்திற்கு புறம்பான சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளததாக, தமிழக காவல்துறையின் புகாரின்
 
மதுரை: மு.க. அழகிரியின் மகன்  தயாநிதி அழகிரியின் 40 கோடி பெருமானமுள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
 
மதுரை மற்றும் சென்னையில் உள்ள தயாநிதியின்அசையும் அசையா சொத்துக்களையும்  ஒலிம்பஸ் கிரானைட்ஸ் நிறுவனத்தின் வைப்பு நிதியையும் சேர்த்து 40.34 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப் பட்டுள்ளதாக அமலாக்கத் துறை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
எஸ்.நாகராஜன் மற்றும் தயாநிதி அழகிரியின் நிறுவனமான ஒலிம்பஸ் கிரானைட்ஸ் நிறுவனம் சட்டத்திற்கு புறம்பான சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளததாக, தமிழக காவல்துறையின் புகாரின் அடிப்படையில் பல்வேறு சட்ட விதிகளின் படி வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
 
– வணக்கம் இந்தியா