அக்னி நட்சத்திரம் 28ம் தேதியுடன் நிறைவடைகிறது! வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும்!

தமிழகத்தைப் பொறுத்த வரை ஏப்ரல் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படும். 2020ல் பருவமழை ஓரளவு பெய்த போதிலும் பிப்ரவரி முதலே வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டு வருகிறது. அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்பே தமிழகத்தின் பல நகரங்களில் வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கி விட்டது. அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த பிறகு வெயில் சதமடிக்க தொடங்கியது. காற்றில் இருந்த கொஞ்ச நஞ்ச ஈரப்பதத்தையும் புயல் இழுத்துச் சென்று விட்டது. இதனால் 2லிருந்து 3டிகிரி வெப்பம்
 

மிழகத்தைப் பொறுத்த வரை ஏப்ரல் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படும். 2020ல் பருவமழை ஓரளவு பெய்த போதிலும் பிப்ரவரி முதலே வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டு வருகிறது.

அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்பே தமிழகத்தின் பல நகரங்களில் வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கி விட்டது. அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த பிறகு வெயில் சதமடிக்க தொடங்கியது. காற்றில் இருந்த கொஞ்ச நஞ்ச ஈரப்பதத்தையும் புயல் இழுத்துச் சென்று விட்டது.

இதனால் 2லிருந்து 3டிகிரி வெப்பம் அதிகமாகவே காணப்படுகிறது. நாளை மறுநாள் மே28ம் தேதியுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஒரு சில நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்படும் என்றும் அதிக அளவு உடல் சோர்வு, தலைவலி, மயக்கம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குழந்தைகள், முதியவர்கள், சர்க்கரை நோயாளிகள் மற்ற நோய்த் தொற்று இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

A1TamilNews.com