பரோலில் உள்ள பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி!

 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று தற்போது பரோலில் உள்ள பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவரது தாயாா் அற்புதம்மாள் அளித்தக் கோரிக்கை மனுவின்பேரில், கடந்த மே 19-ம் தேதி 30 நாள்கள் பரோல் வழங்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, பேரறிவாளன் தினமும் ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறாா்.

இந்த நிலையில், மீண்டும் 30 நாள்கள் பரோல் வேண்டும் என அற்புதம்மாள் அளித்தக் கோரிக்கையின்பேரில், மேலும் ஒரு மாதம் பரோலை தமிழ்நாடு அரசு வழங்கியது.

இந்நிலையில் பேரறிவாளன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக தொற்று, வயிற்று வலி காரணமாக அவர் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதன் காரணமாக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பேரறிவாளன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.