2021ல் எதிர்க்கட்சிகள் இல்லா சட்டமன்றம் தான் அதிசயம் – நடிகர் ஜீவா!

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனது அதிசயம், அற்புதம் என்று ரஜினிகாந்த் கூறியதை அடுத்து, அது தொடர்பான விவாதங்கள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஆக்கிரமித்துள்ளன. ரஜினிகாந்தின் தீவிர ஆதரவாளரான நடிகர் ஜீவா இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். “2021 எதிர்க்கட்சிகள் இல்லாத சட்டமன்றம் உருவாகும் அதிசயம் அற்புதம் நிகழும் #ஆன்மீகஅரசியல் ? #Thalaivar_234 “ என்று ஜீவா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் ஜீவாவை தொடர்பு கொண்டு, எதிர்க்கட்சிகள் இல்லாத சட்டமன்றம் ஜனநாயகத்திற்கு விரோதம் இல்லையா என்று கேட்ட
 

டப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனது அதிசயம், அற்புதம் என்று ரஜினிகாந்த் கூறியதை அடுத்து, அது தொடர்பான விவாதங்கள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஆக்கிரமித்துள்ளன.

ரஜினிகாந்தின் தீவிர ஆதரவாளரான நடிகர் ஜீவா இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். “2021 எதிர்க்கட்சிகள் இல்லாத சட்டமன்றம் உருவாகும் அதிசயம் அற்புதம் நிகழும்  #ஆன்மீகஅரசியல் #Thalaivar_234 “ என்று ஜீவா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் ஜீவாவை தொடர்பு கொண்டு, எதிர்க்கட்சிகள் இல்லாத சட்டமன்றம் ஜனநாயகத்திற்கு விரோதம் இல்லையா என்று கேட்ட போது, “தலைவர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதே மக்களுக்கு சேவை செய்யத்தான். மக்கள் சேவையை எதிர்க்கக் கூடிய எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் எதற்கு?” என்று எதிர்க்கேள்வி எழுப்பினார்.

அரசியல் கட்சிகளுக்கு எதிர்க்கட்சிகள் இருக்கலாம். மக்கள் நலன் சார்ந்த தலைவரின் அரசுக்கு எதிர்க்கட்சிகள் தேவை இல்லையே என்றும் கூறினார்.

https://www.A1TamilNews.com